பிரிட்டனில் புதிய வகை உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் இதன் பரவும் சதவீதம் அதிகம் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பிரிட்டனில் இருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் இந்த புதிய வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஃபேன்ஸ் கலெஜ் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் புதிதாக உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை தங்கள் நிறுவனம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் விரைவில் அதற்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
விமான சேவையை ரத்து செய்வதே கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க சிறந்த தீர்வு என்று அவர் கூறியுள்ளார். புதிதாக உருமாற்றம் பெற்ற வைரஸை எவ்வாறு கையாள்வது என்று உலக சுகாதார நிறுவனம் ஒர் ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments