மும்பை: 'டிவி சேனல்'களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும், டி.ஆர்.பி.,யில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் ‛ரிபப்ளிக் டிவி' தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) வை மும்பை போலீசார் கைது செய்தனர்.
டி.ஆர்.பி., ரேட்டிங்கை உயர்த்தி காட்டுவதில், மோசடி நடந்ததாக மும்பை போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதில், ‛ரிபப்ளிக் டிவி' உட்பட மூன்று சேனல்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த டிவி நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில், இந்த மோசடி வழக்கு தொடர்பாக ‛ரிபப்ளிக் டிவி' சிஇஓ விகாஸ் கன்சன்தனியை மும்பை போலீசார் கைது செய்தனர்.
0 Comments